தொடர்புக்கு : 0421-4238655

தமிழ் வாஸ்து சோதிடம்

வாஸ்து பற்றிய பல்வேறு கருத்துக்கள் பலரால் கூறப்பட்டு வந்தாலும் வாஸ்து என்பதற்கு அடிப்படையே சூரியன் மட்டும் தான். இந்த நிலையில் நமக்கு இயற்கையின் அடித்தளமாக விளங்கும் விலைமதிப்பில்லா சூரிய ஒளியை நாம் நம் வீட்டில் சரியான முறையில் பயன்படுத்தினாலே நம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்பதே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை உண்மை.

வாஸ்து சாஸ்திரம் சுருக்கமாக...
சூரியனை ஆதாரமாக கொண்டு, உயிரற்ற ஜடபொருட்களான செங்கல், சிமெண்ட், மணல், கம்பிகள், வெட்டப்பட்ட மரம் போன்ற வஸ்துகளை சரியான விகிதத்தில் கலந்து நிலத்தின் மேல் கட்டடமாக எழுப்பி உயிரோட்டம் கொடுப்பதே வாஸ்து.