ஜோதிடம் வரலாறு:
ஜோதிடம் கொஞ்சம் நெருடலான விஷயம். ஜோ. அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்டது என்கிறார் ஓஷோ. இந்தப்பக்கம் அறிவியல் அந்தப்பக்கம் ஆன்மிகம். முற்றிலும் உண்மை என்று ஏற்றுக் கொள்ளவும் முடியாத முற்றிலும் பொய் என்று ஒதுக்கி விட முடியாத ஒன்று ஜோதிடம். .
ஜோதிடம் என்பது இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும் உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
கோள்களின் இயக்கங்களை ஞான அறிவால் உணர்ந்த ஞானிகள்; அந்தந்த கோள்களின் நிலை, கதிர்வீச்சுகளின் பலம், வேகம், நகர்வுகள் அடிப்படையில் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் பலாபலன்களை (நன்மை தீமைகளை) ஜோதிட-கணித முறையில் கணக்கிட்டு ஜோதிட சாஸ்திர மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அவற்றை கற்று பலன் பெறுவதே நமது நோக்கம்.