என்னுடைய வரலாறு:
நான் எனது 16வது வயது முதலேயே மனித சமுதாயத்திற்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்குறிய துறையைத்தேடி நான் கண்டுபிடித்தது தான் “சோதிட” துறை. இம்மானுடத்திற்கு வழி காட்டும் சரியான அஸ்திரம் சோதிடமாகும், என்பதை அறிந்து 19வது வயது முதல் சோதிடம் கற்க தொடங்கினேன். அதன் பின் மதுரை KAMARAJ UNIVERSITY யில் Diploma Astrology, பிறகு SASTRA UNIVERSITY யில் B.A. Astrology, பிறகு KARPAGAM UNIVERSITY யில் (Msc Applied Astrology) பயின்று தற்போது சோதிடவியலில் Mphil.பயின்று வருகிறேன். இதுவரை கடந்த 18 ஆண்டுகளாக 1,00,000 ஜாதகம் பார்த்திருக்கிறேன், 3000 குழந்தைகளுக்கு பெயர் சூட்டியிருக்கிறேன், 500க்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு பெயர் வைத்திருக்கிறேன், 2000த்திற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து வைத்திருக்கிறேன்.
நோக்கம்:
★ கோள்களையும், லக்னத்தையும், ராசியையும் எந்த பரிகாரத்தினாலும் மாற்ற முடியாது (அதாவது விதியை) ஆனால் உங்களை நீங்களே மாற்றி கொள்ள முடியும் .
★ பல்கலை கழகம் சென்று சோதிடவியலில் பட்டமேற் படிப்பு படித்ததன் விளைவு பரந்து விரிந்துபட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் விளைவாக துல்லியமான பலன்களை நீங்களே அடைய செய்து வெற்றி பெற வைப்பது.
★ மூடநம்பிக்கைகளை வேறறுத்து (மந்திர யந்திர பரிகாரங்கள்) அறிவியல் பூர்வமான பரிகாரங்களை எடுத்து கூறி கிரக தாக்கங்களில் இருந்து உங்களை விடுபட வைப்பது.
★ காலமே சரியான பரிகாரம், உரிய காலங்கள் வரை காத்திருந்து காரிய வெற்றியை அடைய செய்வது.
★ ஒரு மனிதனை கிரகங்கள் கீழ்கண்டவாறு தாக்குகிறது மனம், புத்தி, சீந்தனை, அறிவு, செயல் அதன்பின் விளைவுதான் கிரகதாக்கம்.
★ எனவே தீய திசாபுத்தி மற்றும் கெட்ட நேரங்களில் மனிதன் தனது மனம், புத்தி, சிந்தனை, அறிவு, செயல் போன்றவைகளை செம்மையாக்கி சமச்சீர் செய்து வாழ்வில் வெற்றி பெறச்செய்வதே என் நோக்கமாகும்.
லட்சியம்:
எனது இந்த பிறவியில் 1லட்சம் மனிதர்களை சந்தித்து அவர்கள் வாழ்வில் எதிர்காலத்தில் வரும் இடர் பாடுகளை அறிய செய்து அவர்களை அதிலிருந்து விடுபட செய்ய முடியும், என்பதை ஆணித்தரமாக அவர்களுக்கு எடுத்துரைத்து, அறிவியல் பூர்வமாக கிரஹங்களின் தாக்கங்களில் இருந்து பரிபூரணமாக தற்காத்து கொள்வது எப்படி என்பதை உணர்த்தி மூட நம்பிக்கைகளை, மூட பழக்கங்களையும் ஒழித்து உங்கள் வாழ்வை உன்னதமாக்குவதே எனது லட்சியம்.