ரதசப்தமியன்று சூரியனை எவ்வாறு வழிபட வேண்டும்?
சூரியனுக்குரிய வடதிசைப்பயணம் துவங்கும் மாதம் தை. இம்மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமியன்று ரதசப்தமி கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சூரியனின் தேர் மேற்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். சூரியன் வலம்வரும் பொன்மயமான தேரின் குதிரைகள் ஏழு என்பதால், சூரியனிடமிருந்து ஏழு பிராணங்களும், ஏழு ஜ்வாலைகளும், ஏழு சமித்துகளும், ஏழு ஹோமங்களும் தோன்றி இதயக்குகையில் ஒடுங்குகின்றன என்று வேதங்கள் சொல்கின்றன.
இறை வழிபாட்டால் நன்மைகள்
இருக்கின்றனவா இல்லையா?”
தொன்று தொட்டு கேட்கப்படும்,
இன்று நேற்று அல்ல, இக்கேள்வி!
நண்பர்கள் இருவர் நடந்தனர்
நண்பகலில் ஒரு தனிவழியில்.
தென்பட்டது இறைவனின் ஆலயம்,
என்றோ எவராலோ கட்டப்பட்டது.
“வணங்கி வழிபடுவோம் வா” என
வருந்தி அழைத்த நண்பனிடம்,
“நான் வரவில்லை கோவிலுக்கு!
நான் இங்கே நிற்பேன் நீ செல்!”
என்றவன் நின்றான் வெளியே
நன்று எனச்சென்றான் மற்றவன்.
இறைவனை வழிபட்டவனை
கருந்தேள் கடித்து விட்டது!
வெளியே நின்றவனுக்கு ஒரு
வெள்ளிப் பணம் கிடைத்தது!
நினைக்க நினைக்க தாளவில்லை,
நிற்காமல் குருவிடம் சென்றான்.
“வணங்கிய எனக்கு தேள்கடியாம்,
வணங்காமுடிக்கு வெள்ளிப்பணம்!
குருவே இது என்ன நியாயம்?
இறைவனின் செயல்களிலே?”
கண்டார் ஞானதிருஷ்டியில் குரு,
கண்களால் காணமுடியாதவற்றை.
“மகனே! உனக்கு இன்று
மரணம் நிகழ இருந்தது.
இறை வழிபாட்டினாலேயே,
பாம்புக்கடி தேள்கடியாயிற்று!
உன் உயிரும் பிழைத்தது
உன் தெய்வ பக்தியினாலே!
வெளியே நின்ற நண்பனுக்கு
வெகு யோகமான நாள் இன்று!
புதையல் கிடைக்கும் யோகம்,
பூரணமாகப் பொருந்தியிருந்தாலும்,
இறைவழிபாடு இல்லாததால்,
சிறு வெள்ளிப் பணமே பரிசு!
ஆண்டவன் செயல்களை நாம்
ஆராய்ந்து அறிய முடியுமா?
நம்பிக்கையை இழக்காதே நீ!
தும்பிக்கையான் கைவிடான்”