தமிழ் எண் கணித சோதிடம்
எண் கணித சாஸ்திரம் பிரதானமான பலன்களுக்கு காரணமாக அமைகிறது. என்று கூறிவிட முடியாது. அதாவது ஜெனன கால ஜாதகம் சரியாக இல்லாமல், எண் கணிதத்தைக் கொண்டு பெயரைத் நன்கு வைத்துக்கொண்டால் வாழ்க்கை நன்றாக அமைந்துவிடுமா?.. அமைவதற்கு வாய்ப்பில்லை! அதாவது மழை பெய்யும் பொழுது குடை பிடிப்பதைப் போன்றும், வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவதைப் போன்றும் இந்த எண் கணித சாஸ்திரமானது மனித சமுதாயத்திற்குப் பயன்படுகிறது.
ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவை. இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்கையில் பொதுவான குணங்களும், நிகழ்வுகளும் அமைகின்றன என்கிறது எண் கணித சாஸ்திரம்.
ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட எண்கள் என்று எப்படி தேர்வு செய்யப்படுகிறது? ஒவ்வொருவர் பிறந்த தினத்தின் கூட்டுத்தொகையைக் கொண்டு அதற்கான எண்கள் கண்டறியப்படுகிறது.
பெயர் நீளம் இருந்தாலும், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நாட்கள், அதிர்ஷ்ட கிரகங்கள் மற்றும் நன்மைகள் தீர்மானிக்கப்பட்டு பெயரின் மொத்த எண்ணிக்கையால் கணக்கிடப்படுகின்றன. மேலும் பிறப்பு நாளில் நாள், மாதம் மற்றும் ஆண்டு முழுவதும், நன்மைகள் கணக்கிடப்படுகிறது. நல்ல மரம் நல்ல பழம் கொடுக்கிறது மற்றும் மோசமான மரம் கெட்ட பழம் கொடுக்கிறது. அதேபோல் நல்ல எண்கள் நல்ல நன்மைகளை தருகிறது, மோசமான எண்கள் மோசமான நன்மைகளை தருகிறது.