தொடர்புக்கு : 0421-4238655

பரிகாரம் சிறப்பு விளக்கம்

எந்த ஒரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு அது போன்று நம் முன்னோர் செய்த தவருகள் அதுவே நம் ஜாதகத்தில் தோஷமாக பரிணாமிக்கிறது இதன் விளைவு, தோல்வி, காரியவிக்கினம், ஏமாற்றம். எதிர்பாராத விதமான துர்சம்பவங்கள் ஏற்படும் எனவே இதற்கு பரிகாரம் நம்மை படைத்த இறைவனிடம் சரணாகதி அடைவதே சிறந்த பரிகாரம் குலதெய்வ வழிபாடு சிறப்பு.

தீபம் ஏற்றுவது

திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்திபொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.

தர்மம் செய்வது

தர்மம் செய்ய நாள் நட்சத்திரம் தேவையில்லை எனினும் ஏகாதசி தவிர்த்து மற்ற எல்லா நாட்களும் தர்மம் செய்ய உகந்த நாளாகும், அன்றாடம் தர்மம் செய்ய முடியாதவர்கள் அமாவாசை. பௌர்ணமி. ஜென்ம பிறந்த நட்சத்திரம் வரும் நாள். ஞாயிற்றுக்கிழமை. தமிழ் மாத பிறப்பு இந்த நாட்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து தர்மம் செய்யுங்கள் நலம் உண்டாகும் .

திருமண தோஷத்துக்கு என்ன பரிகாரம்?

சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் பிட், தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெறலாம். ஜாதக அமைப்புகளை சீர்தூக்கி பார்த்து தகுந்த ஜாதகத்தை சேர்ப்பதன் மூலமாகவும் எளிய பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


நவகிரஹ கோவில்கள்

இந்து மதத்தை சார்ந்தவர்கள் நவகிரஹ கோவில்களுக்கு (தஞ்சை) மாவட்டம் வருடம் ஒருமுறையாவது சென்று வாருங்கள்.